"சூரரைப் போற்று" ஷீ மதிப்பீடு - 4.5/5
வானம் ஒன்றும் யாருடைய அப்பன் வீட்டு சொத்தும் அல்ல எவராக இருந்தாலும் ஏரோப்ளேனில் பயணிக்க முடியும் என்பதை மாறன்அனைத்து வகையான தோல்விகள் பின்பு எவ்வாறு தனது மனைவி, தாய் மற்றும் உண்மையான சில நண்பர்களின் பக்கபலத்துடன் மக்கள் பலத்தை மற்றும் நம்பிகையையும் பெற்று வென்று பறக்கிறார் என்பது தான் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி அவர்களின் நடிப்பில் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைத்து அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள சூரரைப் போற்று திரைப்படம்.
ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சூரரைப் போற்று. படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அவரவர் பங்கினை மிகவும் கச்சிதமாக நடித்துள்ளது தான் படத்தின் மிகப் பெரிய பிளஸ். ஒரே ஒரு குறை என்றால் இத்தகைய அணல்பறக்கும் வசனங்கள் மற்றும் உணர்ச்சிகள் கொண்டுள்ள ஒரு திரைப்படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துடன் முதல் நாள் முதல் ஷோ தியேட்டரில் பார்த்து போற்ற முடியவில்லை என்பது தான்.
மேலும், கேப்டன் மாறாவின் அந்த கண்கள், அந்த அணல் பறக்கும் வசனங்கள்,அந்த விடா முயற்சி மற்றும் ஒடஞ்சு விழும் போதெல்லாம் பக்கப்பலமாக நின்று தோள் கொடுக்கும் மனைவி பொம்மியின் அபாரமான நடிப்பு , 'உன்னை நம்பி இருக்கோம்டா,ஜெயிச்சிருடா' என்கின்ற தாயின் ஏக்கமான சொற்கள்,நண்பர்களின் துனை ஆகிய அனைத்தும் அனைத்து வகையான உணர்ச்சிகளையும் உணர்த்துகிறது என்று தான் கூற வேண்டும்.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் சுறுசுறுப்பு மற்றும் விறுவிறுப்பினை சற்றும் குறையவிடாமல் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ள சுதா கொங்கரா அவர்களை எவரும் போற்றாமல் இருக்கவே முடியாது. மேலும், ஜி.வி. பிரகாஷ் அவர்கள் தனது பின்னணி இசையின் மூலம் நம் உணர்வுகளுடன் பேசியியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.
'உன்னை நம்பி இருக்கோம்டா,ஜெயிச்சிருடா' என்ற தாயின் சொல்லை நினைவில் வைத்து எவ்வாறு மாறன் வென்று பறக்கிறார் என்பதை தெரிந்துக் கொண்டு போற்ற, சூரரைப் போற்று படத்தைப் பார்த்த பிறகு போற்றுங்கள்...!!!!
என்றென்றும் அன்புடன், ஷீ தமிழ்
Comments