கோலிவுட் சென்சேஷன் என்பதற்கேற்ப ரைசா வில்சன் அவர்கள் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
மேலும் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடித்து யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமான போது அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமின்றி மிகப் பெரிய அளவில் சென்சேஷன் ஆக அப்போது முதல் தற்போது வரை உள்ளார் என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
Photographer: Vignesh Kumar | Edit: The Pixchanger | Outfit: S'xeriff
Styling by: G Anusha Meenakshi | Make-up: Nowshiba S | Hair: Ashwini A
லைஃப் ஸ்டைலில் இருந்து ஒரு வழக்கமான பழக்கமாக
மாறியவை :-
சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் செல்லப் பிராணிகள் உடன் செலவிடும் நேரம் ஆகிய விஷயங்கள் தான் லைஃப் ஸ்டைலில் இருந்து ஒரு வழக்கமான பழக்கமாகவும் மாறியுள்ளது என்று கூறுகிறார் ரைசா வில்சன் அவர்கள்.
ரைசா விரும்பும் திரைப்படப் பாத்திரங்கள் :-
ரைசா வில்சன் அவர்கள் விரும்பும் திரைப்படப் பாத்திரங்கள் என்றால் நகைச்சுவை சார்ந்தப் பாத்திரங்கள் என்று தனக்கு பிடித்தமான பாத்திரங்களில் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
ரைசா அவர்களின் பயணத்தில் கொண்டுச் செல்லபவை :-
மாடலிங் தொடங்கியப் பின்னர் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும் மேலும் தான் செய்யும் வேலைகளில் தீவிரமாக வேலை பார்ப்பது ஆகியவை தான் தனக்கு முக்கியம் மற்றும் அது தான் தன்னை கொண்டுச் செல்கிறது என்று கூறுகிறார் ரைசா வில்சன்.
பியார் பிரேமா காதல் போது நடந்த மறக்க முடியாத தருணங்கள் :-
ஹரீஷ் கல்யாணுடன் திரைக்குப் பின்னால் நடந்த வேடிக்கையான சண்டைகள் ஆகியவை தான் பியார் பிரேமா காதல் போது நடந்த மறக்க முடியாத தருணங்களாக எப்போதும் இருக்கும் என்று பகிர்ந்துக் கொள்கிறார் ரைசா வில்சன் அவர்கள்.
Photographer: Vignesh Kumar | Edit: The Pixchanger | Outfit: Nandita Thirani
Styling by: G Anusha Meenakshi | Make-up: Nowshiba S | Hair: Ashwini A
பெண்களை மையமாகக் கொண்ட திரைப்பட கதாபாத்திரங்களின் பற்றிய கருத்து :-
நிச்சயமாக பெண்களை மையமாகக் கொண்ட திரைப்பட கதாபாத்திரங்களில் தான் நடிக்க விரும்புவதாக கூறுகிறார் ரைசா வில்சன்.
முதன் முதலில் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட
உணர்வு :-
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆனந்தகமாக இருந்ததாகவும் மேலும் அது தான் தனக்கு மிகப் பெரிய தருணம் என்று முதன் முதலில் தன்னை திரையில் பார்த்தபோது ஏற்பட்ட நெகிழ்வான தருணங்களை பகிர்ந்துக் கொள்கிறார் ரைசா வில்சன் அவர்கள்.
சரியான இணை நட்சத்திரம் மற்றும் ரைசாவின் செலிபிரிட்டி ஈர்ப்பு :-
தனக்கு சரியான இணை நட்சத்திரம் என்றால் ஹரிஷ் கல்யாண் அவர்கள் என்றும் ரைசா அவர்களின் செலிபிரிட்டி ஈர்ப்பு என்றால் விஜய் தேவரகொண்டா அவர்கள் தான் என்று தனது விருப்பத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார்.
ஷூட் செல்வதற்கு முன்பாக ரைசா அவர்களின் தயாரிப்புகள் :-
ஷூட் செல்வதற்கு முன் ரைசா அவர்களின்
தயாரிப்பு மிகவும் மனரீதியானது என்று கூறுகிறார். மற்றும் மனநிலையைப் புரிந்து கொண்டு கதையை மீண்டும் மீண்டும் படித்துவிட்டு செல்வது தான் தனது வழக்கம் என்று ரைசா அவர்கள் தன்னை எவ்வாறு ஷூட் முன்பாக தன்னை தயார்படுத்திக் கொள்வார்கள் என்று பகிர்ந்துக் கொள்கிறார்.
ரைசா அவர்கள் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு போது நடந்த மறக்க முடியாத தருணங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் :-
மறக்க முடியாத தருணங்களில் ஒன்று என்றால் பியார் பிரேமா காதல் படத்திற்காக எடுக்கப்பட்ட அசர்பைஜான் ஷூட்டிங் தருணங்கள் மற்றும் அழகான தருணங்கள் என்றாலும் பியார் பிரேமா காதல் படத்தின் போது நடந்தவை தான் என்று கூறுகிறார்.
மேலும் ஃப்.ஐ.ர் திரைப்படம் தான் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்று என்று கூறுகிறார். ஃப்.ஐ.ர் திரைப்படத்தின் தீவிர மனநிலை தான் மிகவும் சவாலாக இருந்தது என்றும் கூறுகிறார் ரைசா அவர்கள்.
ரைசாவின் பேஷன் ஸ்டேட்மென்ட் :-
ரைசாவின் பேஷன் ஸ்டேட்மென்ட் என்று குறிப்பிட்ட ஒன்று வைத்துக் கொள்ளாமல் தான் அணியும் அணைத்து ஆடைகளும் தனக்கு வசதியானது என்று கூறுகிறார் ரைசா.
ரைசா அவர்களைப் பற்றி வதந்திகள் என்றால்..?!
தான் மிகவும் சலிப்பாக இருப்பதாகவும். மேலும்சில வதந்திகள் தன்னைப் பற்றி வர வேண்டும் என்று தானும் விரும்புவதாக வேடிக்கையாக கூறுகிறார் ரைசா வில்சன் அவர்கள்.
சர்ச்சைகளை ரைசா அவர்கள் கையாளும் முறை :-
ஒவ்வொருவருக்கும் தங்களுக்கென சொந்த கருத்தை வைத்திருக்க உரிமை உண்டு. மேலும் மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள் என்பதை தன்னால் கட்டுப் படுத்த முடியாது என்றும் வாழுங்கள் மற்றும் வாழ விடுங்கள் என்றும் மிகவும் சரியாக கூறுகிறார் ரைசா அவர்கள்.
தன்னைப் பற்றி ரைசா அவர்கள் படிக்க விரும்பும் விஷயம் :-
தன்னைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்கள் பற்றி தான்ரைசா அவர்கள் படிக்க விரும்பும் விஷயமாக கூறுகிறார் ரைசா.
ரைசா பற்றி யாருக்கும் தெரியாத ஒன்று :-
தான் மிகவும் சென்ஸிடிவ் மற்றும் அந்த ஒரு விஷயம் தன்னை வருத்தம் கூட அடைய வைக்கலாம் ஆனால் அதை எதையும் வெளியே காமித்துக் கொள்ளாமல் சமாளித்துக் கொள்ளும் ஒரு விஷயம் தன்னைப் பற்றி யாருக்கும் தெரியாத ஒன்று என்று கூறுகிறார் ரைசா.
ரைசா செய்ய நினைத்து செய்யாத ஒன்று :-
ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்பதுதான் , தான் நீண்ட நாட்களாக நினைத்து செய்யாமல் விட்ட ஒன்று என்று கூறுகிறார் ரைசா.
ரைசாவிற்க்கு பிடித்த இடம் :-
தனக்கு மிகவும் பிடித்த இடம் என்றால் மாலத்தீவுகள் தான் என்று கூறுகிறார் ரைசா. மேலும் அடுத்து ரைசா அவர்கள் செல்ல விரும்பும் இடத்தை பற்றி கேட்ட போது தனது பட்டியலில் அடுத்தது தான் செல்ல விரும்பும் இடம் என்னவென்று தனக்கே தெரியாது என்றும் மேலும் காலம் தான் அதை தற்போதைய சூழலில் தீர்மானிக்க வேண்டும் என்றும் பொருத்தமான பதிலைக் கூறுகிறார்.
நிஜ வாழ்க்கையில் ரைசா அவர்கள் சந்திக்க விரும்பும் கதாப்பாத்திரம் :-
நிஜ வாழ்க்கையில் ரைசா அவர்கள் சந்திக்க விரும்பும் கற்பனையானப் பாத்திரம் மற்றும் தனக்கு உற்சாகம் தரும் கதாப்பாத்திரம் என்றால் ஹாரி பாட்டர் தான் என்று கூறுகிறார் ரைசா.
தனக்கென பொருத்தமான ஹாஷ்டாக் பற்றிக் கூறும் ரைசா :-
வெர்சடைல் என்ற ஹாஷ்டாக் தான் தன்னைப் பற்றி கூறும் ஹாஷ்டாக் என்றும் மற்றும் அது தான் தன்னைப் பற்றி குறிக்கும் பொருத்தமான ஒரு ஹாஷ்டாக் என்று கூறுகிறார் ரைசா.
ரைசா விரும்பும் பிராண்டுகள் :
இத்தாலிய பிராண்டுகளின் தரம் மற்றும் அச்சிட்டுகள் காரணமாக இத்தாலிய பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் பைகள் ஆகியவை நன்றாக உள்ளதால் அது தனக்கு பிடிக்கும் என்று கூறுகிறார் ரைசா மேலும்
தான் ஒரு பிராண்ட் விரும்பி இல்லை என்றும்
கூறுகிறார்.
ரைசாவின் பியூட்டி மற்றும் ஃபிட்னஸ் ரௌட்டின் :-
சரியாக சாப்பிடுவது, சிடிம் ரொட்டின் ஆகியவை மற்றும் கொஞ்சம் உடல் பயிற்சி ஆகியவை தான் ரைசா அவர்களின் பியூட்டி மற்றும் ஃபிட்னஸ் ரௌட்டின் என்று பகிர்ந்துக் கொள்கிறார்.
ரைசாவின் வெற்றி மந்திரம் :-
கடினமாக உழைப்பது மற்றும் அதில் சிறப்பாக செயல்பட்டப் பிறகு மீதியை கடவுளிடம் விட்டு விடுவது தான் ரைசா அவர்களின் வெற்றி மந்திரம் என்று மிகவும் கச்சிதமாக கூறுகிறார்.
ரைசாவின் ரசிகர் செய்த சுவாரஸ்யமான விஷயம் :-
கோவையில் ஒரு ரசிகர் விமான நிலையத்தில் ஒரு பூச்செண்டுடன் தன்னைப் பார்த்து திரும்பிய போது ஒரு திரைப்பட காதல் காட்சியைப் போன்று மிக அழகாக இருந்ததாக தனக்காக தனது ரசிகர் செய்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் பற்றி கூறுகிறார் ரைசா.
ரைசா அவர்களின் லாக்டவுன் தருணங்கள் :-
சுயமாக விதிக்கப்பட்ட லாக்டவுன்தனக்கு இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும் மேலும் இந்த முழு விஷயமும் நம்பகத்தன்மை இல்லாதது போன்று உணர்வதாகவும் மற்றும் இதெல்லாம் கனவு காண்கிறது போன்று இருப்பதாகவும் தனது லாக்டவுன் தருணங்கள் பற்றி கூறுகிறார் ரைசா.
ரைசா அவர்களின் எதிர்கால முயற்சிகளில் அடுத்த பெரிய விஷயம் :-
சேஸ் , காதலிக்க யாருமில்லை, ஃப்.ஐ.ர் , #லவ் ஆகியவை தான் ரைசா அவர்களின் எதிர்கால முயற்சிகளில் அடுத்த பெரிய விஷயங்கள் என்று பகிர்ந்துக் கொள்கிறார் ரைசா.
தன்னை எதிர்நோக்கிப் பார்க்கும் அனைத்து இளம் பெண்களுக்கும் ரைசா அவர்கள் கூறும் செய்தி :-
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு சோர்வடைய வேண்டாம் என்றும் நாம் தான் நம்மை நம்ப வேண்டும் என்றும் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது மட்டுமின்றி கடவுளிடம் பிராத்தனை செய்துக் கொள்ள வேண்டும் ஆகியவை தான் ரைசா அவர்கள் தன்னை எதிர்நோக்கிப் பார்க்கும் அனைத்து இளம் பெண்களுக்கும் கூறுகிறார்.
அது/ இது :-
பேஸ்புக் /இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்
வெப் சீரிஸ்/ மூவிஸ்
மூவிஸ்
ரொமான்ஸ் / காமெடி
ரொமான்ஸ்
ஷார்ட் ஹேர் / லாங்க் ஹேர்
இரண்டும்
ஸ்மூத்தி / ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்
டையட் / ஃபுடி
ஃபுடி
வின்டேஜ்/மாடர்ன்
வின்டேஜ்
தனியாக பயணம் செய்வது / பேமிலி மற்றும் நண்பர்கள் உடன் பயணம் செய்வது
இரண்டுமே விருப்பம்.
பங்கீ ஜம்பிங் / ஸ்கூபா டைவிங்
ஸ்கூபா டைவிங்
பிளாக் / ரெட்
ரெட்
என்றென்றும் அன்புடன், ஷீ தமிழ்
留言