தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கியவர் தான் மியா ஜார்ஜ் அவர்கள். அமர காவியம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் எமன், இன்று நேற்று நாளை, வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து கலக்கி உள்ளார் மற்றும் தற்போது தமிழில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.மேலும் இவர் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நடிகை மியா ஜார்ஜ் மற்றும் தொழிலதிபர் அஸ்வின் ஃபிலிப் அவர்களின் திருமண நிகழ்ச்சி 12 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2020 அன்று எர்ணாகுளத்தில் உள்ள புனித மேரி கேத்தட்ரல் தேவாலயத்தில் நடைபெற்றது. மற்றும் இவர்களின் திருமண நிகழ்ச்சி இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது .
மற்றும் இணைய தளத்தில் வெளியான மியா ஜார்ஜ் ,்ஸ்வின் ஃபிலிப் அவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸை குவித்தது என்பதை எவரும் மறந்திருக்க முடியாது அவ்வாறு இருக்க அவர்களின் திருமணம் பற்றி வெட்டிங் சீரிஸில் இல்லாமல் எப்படி...?!
திருமண நிச்சயதார்த்த விழா :-
நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் திருமண நிச்சயதார்த்த விழா திருமணத்திற்கு முன்பாக நடந்தது. அந்த விழாவில் பாஸ்டெல் வண்ணங்களில் தான் விழா நடத்திய இடம் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
மற்றும் பெரும்பாலான விஷயங்கள் விக்டோரியன் தீம் மையமாக வைத்து தான் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தோன்றியது.
இரண்டு காதல் பறவைகளான மியா ஜார்ஜ் மற்றும் அஸ்வின் ஃபிலிப் அவர்கள் பாரம்பரியம் கொண்ட ஆடைகளை தான் அணிந்திருந்தனர். மற்றும் அவர்களின் ஆடை பெரும்பாலும் வெளிர் இளஞ்சிவப்பு மற்றும் நீல கலவையை கொண்டதாக இருந்தது.
மியா ஜார்ஜ் ப்ரைடல் ஷவர் :-
மியா ஜார்ஜ் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் ப்ரைடல் ஷவர் ஒன்று திருமணத்திற்கு முன்பாக நடத்தினார்கள் மற்றும் அந்த பார்ட்டியில் மியா ஜார்ஜ் அவர்கள் பீச் நிற 'பிரைட்-டு-பி-ஸாஷ்' என்று கொண்ட ஆடையில் பிங்க் நிற இதயம் வடிவம் சன்கிளாஸ் இல் தனது நண்பர்கள் உடன் உள்ள புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்...!!!
மதுரம்வேப்பில் மனதை கவர்ந்த மியா ஜார்ஜ் :-
திருமணத்திற்கு முன்பாக நடந்த ப்ரீ வெட்டிங் செரிமனியான 'மதுரம்வேப்பு' என்னும் விழா நடைபெற்றது.
மற்றும் அந்த விழாவில் மணமகள் அவர்கள் தனது அன்பானவர்களுக்கும் அருகிலுள்ளவர்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி உள்ளார்.
மற்றும் அந்த விழாவிற்கு, மியா அவர்கள் ஒரு 'கசவு' சேலை அணிந்து, மோத்தி ஜர்தோஜி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ் இல் பாரம்பரிய தோற்றத்தில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்...!!!!
ப்ரீ வெட்டிங் ஷூட்டிங்கில் மியா ஜார்ஜ் :-
கிராண்ட் ஹையாட்டில் கடலின் அழகிய பின்னனி உடன் திருமணத்திற்கு முந்தைய திருமண படப்பிடிப்பான ப்ரீ வெட்டிங் ஷூட் இன் போது, மியா அவர்கள் நீலமான கவுன் மற்றும் ஷீர் வெய்ல் அணிநிதப்படி புகைப்படம் காண்போர்களை கவராமல் இருக்கவே முடியாது...!!!!
திருமணத்தில் திருமண ஆடைகளும் அலங்காரங்களும் :-
திருமண இடத்தில் வெளிர் இளஞ்சிவப்பு கொண்ட ரோஜாக்களாலும், சாண்ட்லியர்ஸ் மற்றும் மெழுகுவர்த்தியுடன் கொண்ட அலங்காரங்கள் அனைத்தும் விக்டோரியன் தொடுதல் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.
மற்றும் மியா ஜார்ஜ் அவர்களின் கோல்டன் சீக்வின் வேலைபாடுகள் கொண்ட கிரீம் கவுன் அங்கு இருந்த அலங்காரத்தின் உடன் ஒருங்கிணைந்த வகையில் அமைந்தது. மேலும் அது திருமணத்திற்கு இன்னும் சிறப்பு தோற்றத்தை அளித்தது என்று தான் கூற வேண்டும்.
ஹை நெக்லைன் மற்றும் கோல்டன் சீக்வின் வேலைபாடுகள் கொண்ட கிரீம் கவுன் உடன் வைர நெக்லஸ் அணிந்தபடி ஒரு பூச்செண்டு வைத்திருக்கும் படி குளியல் தொட்டியில் எடுத்த புகைப்படம் மிகவும் வைரலாக சமூக வலைதளங்களில் பகிரவும் பட்டது.
கோல்டன் சீக்வின் வேலைபாடுகள் கொண்ட கிரீம் கவுன் இல் மியா ஜார்ஜ் அவர்கள் ஜொலித்தது மட்டுமின்றி அவரது திருமண கவுனின் அதே துணியிலிருந்து தயாரிக்கப் பட்ட எம்பிராய்டரி மாஸ்க் அணிந்திபடியும், அஸ்வின் அவர்கள் ஒரு நீல வண்ண கோட் சூட்டிலும் அணிந்தபடி இருவரும் தனது குடும்பங்களுடன் தேவாலயத்திற்கு வந்தனர். விழாவைத் தொடர்ந்து கிராண்ட் ஹையாட்டில் வரவேற்பும் நடைப்பெற்றது.
முடிவில்லா புன்னகையில் வாழ வேண்டும் :-
முடிவில்லா புன்னகையில் வாழ்நாள் முழுவதும் நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உடன் வாழ வாழ்த்துக்கள் கோப்ரா நடிகை மியா ஜார்ஜ் மற்றும் அஸ்வின் ஃபிலிப்...!!!!
என்றென்றும் அன்புடன், ஷீ தமிழ்
Comments